ஆப்நகரம்

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விதிமுறைகள் மாற்றம்.. இனி இது கட்டாயம்!

10 லட்சம் ரூபாய்க்கு மேல் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான சான்று கட்டாயமாக தேவை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 1 Jun 2023, 1:09 pm
சிறு சேமிப்பு திட்டங்களில் ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பல தரப்பினரும் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ரிஸ்க் இல்லாத முதலீடு, நல்ல வருமானம் ஆகியவை சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான காரணங்கள் ஆகும்.
Samayam Tamil small saving schemes
small saving schemes


அண்மையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால், சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

இதன்படி, சிறு சேமிப்பு திட்டங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் வருமான சான்று கட்டாயமாக வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களிடம் வருமான சான்று பெறும்படி தபால் அலுவலக ஊழியர்களுக்கு இந்திய தபால் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் தீவிரவாதம், பண மோசடி போன்றவற்றுக்கு சிறு சேமிப்பு திட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு தடுப்பதற்காக KYC விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் அவர்களின் ரிஸ்க் அடிப்படையில் குறைந்த ரிஸ்க், நடுத்தர ரிஸ்க், அதிக ரிஸ்க் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இதில் குறைந்த ரிஸ்க் முதலீட்டாளர்கள் என்பவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் 50,000 ரூபாய் வரை முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்.

நடுத்தர ரிஸ்க் முதலீட்டாளர்கள் என்பவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் 50,000 ரூபாய்க்கு மேல், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்.

அதிக ரிஸ்க் முதலீட்டாளர்கள் என்பவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள். இந்த அதிக ரிஸ்க் முதலீட்டாளர்கள் தங்கள் வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்