ஆப்நகரம்

100 நாள் வேலைத் திட்டத்திற்கு செக்.. மத்திய அரசு எடுத்த முடிவு!

100 நாள் வேலைத்திட்டத்தில் மத்திய அரசு வைக்கும் கிடுக்குப்பிடி.

Samayam Tamil 13 Feb 2022, 4:21 pm
100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விதிமுறைகளை கடுமையாக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
Samayam Tamil MNREGA


கடந்த இரண்டு ஆண்டுகளாக 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் விதிமுறைகளை கடுமையாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக சீனியர் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

2022-23ஆம் ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்துக்கு 73000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் ஏராளமான பணம் இடைத்தரகர்களுக்கு போவதாகவும், பயனாளிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் பதிவு செய்துகொண்டு பணத்தை பெறுவதாகவும் அரசுக்கு தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு சிறந்த முதலீடு.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?
பல பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே பணம் அனுப்பப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் ஊழியர்கள் மூலமாகவே பணம் விநியோகிக்கப்படுகிறது. இப்படி இடைத்தரகர்களாக இருப்பவர்கள் நிறைய பணத்தை முறைகேடு செய்து எடுத்துக்கொள்வதாக தெரிகிறது.

எனவே, நிதிக் கசிவுகளை நிறுத்துவதற்காக 100 நாள் வேலைத் திட்டத்தில் விதிமுறைகளை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் கடுமையாக்கப்போவதாக சீனியர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்