ஆப்நகரம்

தங்கப் பத்திரம் விற்பனை.. விலை இதுதான்.. தள்ளுபடியும் கிடைக்கும்!

நாளை முதல் தங்கப் பத்திரம் விற்பனை தொடங்க இருக்கிறது. எப்படி முதலீடு செய்து பயன்பெறலாம் என்பதை பார்க்கலாம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 5 Mar 2023, 4:58 pm
தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond) ஒரு சிறந்த வாய்ப்பு. வரி கிடையாது, செய்கூலி சேதாரம் கிடையாது, கூடுதல் செலவுகள் கிடையாது, வட்டி வருமானம் கிடைக்கும் என நிஜத் தங்கத்தை காட்டிலும் தங்கப் பத்திரத்தில் பலன்கள் ஏராளம். எனவே, தங்கப் பத்திரங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Samayam Tamil sovereign gold bond 2022 23 series iv sale to open on march 6th check price and discount available for buyers
தங்கப் பத்திரம் விற்பனை.. விலை இதுதான்.. தள்ளுபடியும் கிடைக்கும்!


தங்கப் பத்திரம் விற்பனை தேதி

இந்நிலையில், தங்கப் பத்திரங்களின் அடுத்த தொகுப்பு விற்பனை நாளை (மார்ச் 6) தொடங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 10ஆம் தேதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கப் பத்திரம் விலை

இந்த முறை தங்கப் பத்திரங்களுக்கு ஒரு கிராம் 5611 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு கிராமுக்கு தங்கப் பத்திரம் வாங்க வேண்டும். அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம்.

தங்கப் பத்திரம் விலை தள்ளுபடி

தங்கப் பத்திரங்களை டிஜிட்டல் முறையில் வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரங்களை ஒரு கிராம் 5561 ரூபாய் என்ற விலைக்கு வாங்க முடியும்.

தங்கப் பத்திரம் வாங்குவது எப்படி?

வங்கிகள், தபால் அலுவலகங்கள் வாயிலாக தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இதுபோக பங்குச் சந்தைகளிலும் தங்கப் பத்திரத்தை வாங்கலாம்.

தங்கப் பத்திரம் வட்டி விகிதம்

தங்கப் பத்திரத்தில் நீங்கள் முதலீடு செய்தால், தங்கம் மதிப்பு உயர உயர உங்கள் முதலீடும் உயரும். இதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைக்கும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்