ஆப்நகரம்

எலான் மஸ்க்கை விமர்சித்த ஊழியர்கள் பணிநீக்கம்.. SpaceX எடுத்த ஆக்‌ஷன்!

எலான் மஸ்க்கை விமர்சித்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

Samayam Tamil 18 Jun 2022, 1:48 pm
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், எலான் மஸ்க்கை விமர்சித்த ஊழியர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil elon musk


எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு முயற்சித்து வருகிறார். இதற்காக 44 பில்லியன் டாலருக்கு டீல் பேசியுள்ளார். எனினும் தற்போது இந்த ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது. எனினும், ட்விட்டர் ஊழியர்களுடன் அண்மையில் எலான் மஸ்க் உரையாடியுள்ளார்.

அப்போது அவர், ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை விட செலவுகள் அதிகமாக இருப்பதாகவும், ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்தார். மேலும், கருத்து சுதந்திரம் மிக முக்கியம் என எலான் மஸ்க் தொடர்ந்து பேசி வருகிறார்.

ட்விட்டர் ஊழியர்கள் வெளியேற்றம்.. கருத்து சுதந்திரம் கட்டாயம்.. பூகம்பத்தை கிளப்பும் எலான் மஸ்க்
இந்நிலையில், எலான் மஸ்க்கை விமர்சித்து வெளிப்படையாக கடிதம் எழுதிய ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் சிலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில், எலான் மஸ்க் தொடர்ந்து திசைதிருப்பி வருவதாகவும், நிறுவனத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், எலான் மஸ்கிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடிவாளம் போட வேண்டும் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்