ஆப்நகரம்

ஜிஎஸ்டி மசோதா: கோவா, ஒடிசா மாநிலங்களில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்

திருத்தங்களுடன் கூடிய ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றும் விதமாக, கோவா மற்றும் ஒடிசா மாநில அரசுகள், சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

TNN 25 Aug 2016, 5:11 am
திருத்தங்களுடன் கூடிய ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றும் விதமாக, கோவா மற்றும் ஒடிசா மாநில அரசுகள், சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
Samayam Tamil special session of goa assembly to ratify gst on august 31
ஜிஎஸ்டி மசோதா: கோவா, ஒடிசா மாநிலங்களில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்


இதன்படி, வரும் 31ம் தேதியன்று கோவா மாநில சட்டப்பேரவை கூடுகிறது. அதில் ஜிஎஸ்டி மசோதாவின் சாதகமான அம்சங்கள் பற்றியும், அதனை செயல்படுத்துவதால், கோவா மாநிலத்திற்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் விவாதம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்ட உடனே, அதற்கு முழு வரவேற்பு தெரிவித்ததாகவும் கோவா அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, செப்டம்பர் 1ம் தேதியன்று சட்டப்பேரவையை கூட்டி, ஜிஎஸ்டி தொடர்பாக விவாதித்து, ஆதரவு வழங்க, ஒடிசா அரசும் முடிவு செய்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். இதன்பேரில், அன்றைய நாளில் முழு விவாதம் நடத்தி, மசோதாவை நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி ஒடிசா சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்கூட்டியே, கூட்டம் நடத்த நவீன் பட்நாயக் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்