ஆப்நகரம்

செலவே இல்லாமல் மீன் வளர்ப்பு தொழில்.. அரசின் அடடே திட்டம்!

மீன் வளர்ப்புத் தொழிலுக்கு முழு உதவியும் வழங்கும் மத்திய அரசு திட்டம்.

Samayam Tamil 1 Feb 2023, 11:51 am
மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் வருமானத்தை பெருக்குவதற்காக மத்திய அரசு பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மீன் உற்பத்தி, தரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.
Samayam Tamil fish farming


இத்திட்டத்திற்காக மத்திய அரசு 20050 கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன் உற்பத்தி தொழில் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கு இது ஒரு சூப்பர் திட்டம்.

மீனவர்கள், மீன் உற்பத்தியாளர்கள், மீன் சார்ந்த தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், சுய உதவிக் குழுக்கள், மீனவர் கூட்டமைப்புகள், தொழில் முனைவோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இத்திட்டம் மூலம் பயனடையலாம்.

அமேசான் மூலம் ஈசியா பணம் சம்பாதிப்பது எப்படி?
பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட மீன் சார்ந்த தொழில்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இதில் மத்திய அரசு திட்டம், மத்திய அரசு ஆதரவுடனான திட்டம் என இரு வகை திட்டங்கள் உள்ளன.

மத்திய அரசு திட்டத்தில் மொத்த செலவும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் எந்த செலவும் செய்யத் தேவையில்லை. மத்திய அரசு ஆதரவுடனான திட்டத்தில் மொத்த செலவில் 60 விழுக்காட்டை மத்திய அரசும், 40 விழுக்காட்டை மாநில அரசும் ஏற்றுக்கொள்ளும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்