ஆப்நகரம்

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை... உஷாரையா உஷாரு!

ஆன்லைன் மோசடி தொடர்பாக மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி.

Samayam Tamil 5 May 2021, 9:17 pm
எவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் வந்தாலும் அதற்கேற்ப மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வங்கி மோசடிகள் இப்போதெல்லாம் அதிகமாக நடைபெறுகின்றன. வங்கிகள் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வங்கி அதிகாரிகள் போல பாவனை செய்து பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல்களின் மோசடிச் செயல்கள் அதிகரித்துவிட்டன. வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு போன் செய்து அவர்களது தனிநபர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு, பணத்தை எடுக்கும் மோசடி தொடர்கிறது.
Samayam Tamil SBI


அதேபோல, வங்கியில் இருந்து அழைப்பதாகக் கூறி நம்மிடம் வங்கிக் கணக்கு விவரங்களையும் ஓடிபி எண், PIN நம்பரை திருடும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இதனால் நமக்குத் தெரியாமலே வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போகிறது. அதாவது திருடப்படுகிறது. ஏடிஎம் எந்திரங்களில் நமது PIN நம்பரைத் திருடி பணத்தை எடுப்பதும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து வங்கிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வந்தாலும் இந்த மோசடிகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பாக மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளது. ஆன்லைன் மூலமாக தனிநபர் விவரங்களை யாரிடமும் பகிரவேண்டாம் எனவும், ஆன்லைனில் வரும் தேவையில்லாத மொபைல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் மிகவும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருப்பதற்காக சில நடவடிக்கைகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உஷார் செய்துள்ளது.

>> OTP மற்றும் PIN நம்பரை யாரிடமும் பகிர வேண்டாம்.

>> ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது போன்ற விஷயங்களைத் தவிர்க்கவும்.

>> ஆதார் நகலை அறிமுகம் இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

>> உங்களது புதிய காண்டாக்ட் விவரங்களை வங்கிக் கணக்கில் புதுப்பிக்கவும்.

>> அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றவும்.

>> உங்கள் மொபைல் மற்றும் ரகசிய தரவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

>> எந்தவொரு ஆன்லைன் லிங்க்கையும் கிளிக் செய்வதற்கு முன் யோசிக்கவும்.

உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக சந்தேகித்தால், உடனடியாக கட்டணமில்லா வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களுக்கு அழைத்தோ அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொண்டோ புகார் அளிக்கலாம்.
அழைப்பு - 18004253800, 1800112211
மின்னஞ்சல் - https://cybercrime.gov.in

அடுத்த செய்தி

டிரெண்டிங்