ஆப்நகரம்

கொரோனாவால் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2021, 8:21 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது. கொரோனா பாதிப்பால் 2020 மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் துறை முடங்கியதோடு, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. எனினும், 2021ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்திருந்தன.
Samayam Tamil gdp


இந்நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதால் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது. ஆய்வு நிறுவனங்களும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீட்டைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தரப்பில் வெளியிடப்பட்டிருந்த ஆய்வறிக்கையில், 2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 11 சதவீதம் வளர்ச்சியைச் சந்திக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையால் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 10.4 சதவீதமாகக் குறைத்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு 80 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மட்டும் 54 சதவீத இழப்புக்குக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த மாநிலத்தின் மொத்த இழப்பு ரூ.82,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது.

கொரோனா 2ஆம் அலை.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி போட்ட உத்தரவு!
ஊழியர்கள் தட்டுப்பாடு தற்போது மற்றொரு பிரச்சினையாக எழுந்துள்ளது. கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு அறிவிப்புகளால் சுமார் 4.3 லட்சம் பேர் ஏப்ரல் 1 முதல் 12 வரை தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே தரப்பு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்