ஆப்நகரம்

இனி வீடு கட்டுவது ரெம்ப கஷ்டம்... வட்டி உயர்வு!

வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Apr 2021, 3:01 pm
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன் தொடர்பான அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 1 முதல் வீட்டுக் கடன்களுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வங்கி சிறப்புச் சலுகையின் கீழ் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி, மார்ச் 31 வரை வாடிக்கையாளர்களுக்கு 6.7 சதவீத வட்டியில் வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் வீட்டுக் கடன் வட்டியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மீண்டும் உயர்த்தியுள்ளது.
Samayam Tamil sbi home loan


வட்டி உயர்த்தப்பட்டிருந்தாலும் பெண் வாடிக்கையாளர்களுக்கு 5 அடிப்படைப் புள்ளிகள் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெண்களுக்கு 6.95 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மார்ச் 31 வரையில் வழங்கிய சிறப்பு கடன் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ரூ.75 லட்சம் வரையில் வீட்டுக் கடனை 6.70 சதவீத வட்டிக்கு வாங்கினர். அதேபோல, ரூ.75 லட்சத்துக்கு மேலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக விண்ணப்பித்தால் வட்டியில் 5 அடிப்படைப் புள்ளிகள் சலுகை கிடைப்பதோடு, செயல்பாட்டுக் கட்டணமும் 100 சதவீதம் ரத்து செய்யப்பட்டது.

கேஸ் சிலிண்டர் சலுகை.. ஒண்ணு வாங்கினால் இன்னொண்ணு கிடைக்கும்!
வீடு கட்டும் எண்ணத்தில் இருக்கும் பலர் முதலில் யோசிப்பது, வீடு கட்டுவதற்கான பணத்தை எப்படிப் புரட்டுவது என்பதுதான். தற்போதைய காலத்தில் நடுத்தர மக்கள் முழுத் தொகையையும் கொடுத்து வீடு கட்டுவது சிரமமான ஒன்று. அதற்காகவே வங்கிகளில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. புத்தாண்டு முதல் பல்வேறு வங்கிகளில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இப்போது எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மற்ற வங்கிகளில் எவ்வளவு வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்