ஆப்நகரம்

வீட்டிலிருந்தே வேலை: எஸ்பிஐ புதிய திட்டம்!

எங்கிருந்து வேண்டுமானாலும் வேலைபார்க்கும் வசதியை விரைவில் கொண்டுவரப்போவதாக ஸ்டேட் பேங்க் இந்தியா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Jul 2020, 5:51 pm
இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பின்னர் தொழில் நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கின. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதித்தன. இது தொழிலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிறுவனங்களுக்குள் அலுவலக வாடகை, மின் கட்டணம், உள்ளிட்ட செலவுகள் குறைவதால் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறையைப் பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன.
Samayam Tamil sbi


மற்ற நாடுகளில் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறை பரவலாக இருக்கும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து இந்த நடைமுறை பிரபலமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அலுவலகத்துக்கு வராமல் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலைபார்க்கும் வசதியைக் கொண்டுவரவுள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.1,000 கோடி வரையில் மிச்சப்படுத்த முடியும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவரான ராஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.

வீட்டிலிருந்தே எப்படியெல்லாம் பெர்சனல் லோன் வாங்கலாம்?

கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு மோசமான ஆண்டாக இருக்கும் எனவும், இனிமேல் இதுபோன்ற திடீர் பிரச்சினைகள் உருவானால் அதைச் சமாளிக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தயாராக இருப்பதாகவும் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களாகவே வங்கி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வங்கிகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடையே சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனைத்து பிரிவினருக்கும் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டதால் வங்கிப் பரிவர்த்தனைகளில் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்