ஆப்நகரம்

எஸ்பிஐ வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் 81 சதவீதம் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 1 Aug 2020, 2:33 pm
இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வருவாய் இழப்பும் நிதி நெருக்கடியும் நிலவுகிறது. ஏப்ரல் - ஜூன் காலாண்டு நிறைவடைந்து ஒவ்வொரு நிறுவனமாக வருவாய் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் இக்காலத்தில் நஷ்டத்தையே சந்தித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 81 சதவீத வளர்ச்சியுடன் ரூ.4,189 கோடி லாபம் கிடைத்துள்ளது.
Samayam Tamil sbi


2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் நிகர லாபம் ரூ.2,312 கோடியாக இருந்தது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வருவாய் விவரங்களை வெளியிட்டவுடன் அதன் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 3 சதவீதம் வளர்ச்சி கண்டது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் வாங்கியவர்களில் சுமார் 9.5 சதவீதத்தினர் மட்டுமே கடன் தவணைச் சலுகைப் பயன்படுத்தியாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு, வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்த ஆறு மாதங்களுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பெரும்பாலான கடனாளிகள் தங்களது கடனை இக்காலத்தில் முறையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனர்.

டிக்டாக்கை விலைக்கு வாங்கும் மைக்ரோசாஃப்ட்?

ஊரடங்கு காலத்தில் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது சொத்தில் ஒரு பகுதியை விற்பனை செய்திருந்தது. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள 2.1 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ததின் மூலமாக ரூ.1,539.73 கோடியைத் திரட்டியிருந்தது. வட்டியல்லாத இதர வருவாயைப் பொறுத்தவரையில், 0.7 சதவீத வீழ்ச்சியுடன் ரூ.7,957.48 கோடியாக இருந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்