ஆப்நகரம்

தமிழ்நாடு அரசு பத்திரங்கள் விற்பனை.. எப்படி வாங்குவது?

தமிழ்நாடு அரசு பிணைய பத்திரங்கள் விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Jan 2023, 11:22 am
தமிழ்நாடு அரசு அவ்வப்போது பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. இந்த பிணைய பத்திர விற்பனை ரிசர்வ் வங்கி அலுவலகம் வாயிலாக நடைபெறுவது வழக்கம்.
Samayam Tamil govt bonds
govt bonds


இந்நிலையில், தமிழ்நாடு அரசு அடுத்த பிணைய பத்திர விற்பனைக்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஜனவரி 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வடிவிலான 10 ஆண்டு பிணையப் பத்திரங்களை ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்போவதாக தெர்வித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பத்திரங்களை வாங்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தமிழ்நாடு அரசின் பிணைய பத்திரங்களை ஏலம் வாயிலாக எப்படி வாங்குவது என பார்க்கலாம்.

8 முறை பொருளாதார மந்தநிலையை 100% கணித்த வல்லுநர்.. இப்போ என்ன சொல்றார் தெரியுமா?
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நிதி துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு அரசு ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜனவரி 10, 2023 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber)System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜனவரி 10, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்