ஆப்நகரம்

Share Market: சென்செக்ஸ் பாசிடிவ்... சர்ப்ரைஸ் கொடுத்த பங்குகள் இதோ!

இன்று பங்கு வர்த்தகத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் உள்ளிட்டவை டாப் பங்குகளாக விற்பனையாகின்றன.

Samayam Tamil 23 Jul 2020, 10:43 am

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியபிறகு சென்செக்ஸ் 64.34 புள்ளிகள் உயர்ந்து 37,935.86ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை நிஃப்டி 34.15 புள்ளிகள் உயர்ந்து 11,166.75ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் அதிகபட்சமாக ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலை 2.04% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக எல்&டி 1.09%, ஹெச்டிஎஃப்சி 1.01% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக ஆக்சிஸ் பேங்க் பங்கு விலை 1.73% சரிந்துள்ளது. அடுத்தபடியாக டெக் மகிந்த்ரா 1.33%, இன்ஃபோசிஸ் 1.07%, பஜாஜ் ஆட்டோ 0.82%, ஹெச்சிஎல் டெக் 0.81%, டிசிஎஸ் 0.37% சரிந்துள்ளன.
இதை செய்யலன்னா உங்கள் பணம் போய்டும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

நிஃப்டியில் அதிகபட்சமாக ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் பங்கு விலை 3.73% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக பாரத் பெட்ரோலியம் 1.95%, யூபிஎல் 1.60%, டைடன் 1.44%, ஹெச்டிஎஃப்சி 1.39%, கிரசிம் 1.35%, இந்தியன் ஆயில் 1.25%, வேதாந்தா 1.25% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக டெக் மகிந்த்ரா பங்கு விலை 1.49% சரிந்துள்ளது. அடுத்தபடியாக ஆக்சிஸ் பேங்க் 1.01%, இன்ஃபோசிஸ் 0.90%, ஹெச்சிஎல் டெக் 0.76%, பஜாஜ் ஆட்டோ 0.69%, பவர் கிரிட் 0.64%, டிசிஎஸ் 0.61% சரிந்துள்ளன.
இளம் வயதில் எப்படி முதலீடு செய்யலாம்? சிறந்த ஐடியா இதுதான்!

நிஃப்டியில் நீண்டகாலமாக சரிவுப் பாதையில் இருந்த ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் இன்று நல்ல முன்னேற்றத்தை எட்டி டாப் பங்காக உயர்ந்துள்ளது. ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் 70% உயர்ந்துள்ளதால் அதன் பங்கு விலை 4% உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.0.05 உயர்ந்து ரூ.74.67ஆக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்