ஆப்நகரம்

Sensex Today: மரண அடி வாங்கிய சென்செக்ஸ் - படுமோசமான நிலையில் மார்கெட்!

இன்று பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

Samayam Tamil 4 Sep 2020, 10:52 am

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியபின் காலை 10.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 476.41 புள்ளிகள் சரிந்து 38,514.53ஐ தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 131.75 புள்ளிகள் சரிந்து 11,395.70ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


கடந்த சில தினங்களாக நிலையாக இருந்த சென்செக்ஸ் இன்று கடுமையான சரிவை சந்தித்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளின் சரிவு இந்திய சந்தைகளிலும் எதிரொலித்திருக்கிறது. சென்செக்ஸில் மாருதி சுஸுகி பங்கு விலை மட்டும் 1.53% உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி பங்கு விலை 1.99% சரிந்துள்ளது. அடுத்தபடியாக கொடாக் மகிந்த்ரா 1.88%, எஸ்பிஐ 1.88%, ஐசிஐசிஐ பேங்க் 1.71%, பவர் கிரிட் 1.68%, ஐடிசி 1.54%, ஆக்சிஸ் பேங்க் 1.49%, டெக் மகிந்த்ரா 1.47%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.46% சரிந்துள்ளன.

எகிறி அடிக்கும் Bharti Infratel - இதை வாங்கலாமா?

நிஃப்டியில் அதிகபட்சமாக பார்தி இன்ஃப்ராடெல் பங்கு விலை 3.55% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக மாருதி சுஸுகி 1.38% உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக எஸ்பிஐ பங்கு விலை 2.13% சரிந்துள்ளது. அடுத்தபடியாக பவர் கிரிட் 2.10%, ஹெச்டிஎஃப்சி 2%, கொடாக் மகிந்த்ரா 1.94%, ஐடிசி 1.93%, ஐசிஐசிஐ பேங்க் 1.91%, ஆக்சிஸ் பேங்க் 1.86%, விப்ரோ 1.86%, டாடா ஸ்டீல் 1.69% சரிந்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.21 சரிந்து ரூ.73.47ஆக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்