ஆப்நகரம்

80 ரூபாய் டிவிடெண்ட்.. பணம் அள்ளி கொடுத்த பங்கு.. வாங்குவதற்கு வாய்ப்பு!

80 ரூபாய் டிவிடெண்ட் அள்ளிக் கொடுத்த ஸ்டைரெனிக்ஸ் பர்ஃபார்மன்ஸ் மெட்டிரியல்ஸ் பங்கு விலை 16% சரிந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Mar 2023, 11:52 am
Styrenix share: ஸ்டைரெனிக்ஸ் பர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ் (Styrenix Performance Materials) பங்கு விலை கடந்த வெள்ளிக் கிழமை பங்கு வர்த்தகம் முடிவில் 13% மேல் சரிந்துள்ளது. டிவிடெண்ட் வழங்குவதற்கான தேதி முடிந்துள்ள நிலையில் அதன் பங்கு விலை சரிந்துள்ளது.
Samayam Tamil Dividends
Dividends


அண்மையில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அறிவித்து வருகின்றன. இவ்வகையில், ஸ்டைரெனிக்ஸ் பர்ஃபார்மஸ் மெட்டீரியல்ஸ் நிறுவனமும் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 80 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

80 ரூபாய் என்பது மிக அதிகமான டிவிடெண்ட் தொகை. இந்த டிவிடெண்ட் தொகை பெறுவதற்கு மார்ச் 24ஆம் தேதி பதிவு தேதி (Record date) ஆகும். அதாவது மார்ச் 24ஆம் தேதி யாரிடமெல்லாம் ஸ்டைரெனிக்ஸ் பங்குகள் இருப்பதாக பதிவுகள் கூறுகிறதோ அவர்களுக்கு ஒரு பங்குக்கு 80 ரூபாய் வீதம் டிவிடெண்ட் செலுத்தப்படும்.

மார்ச் 24ஆம் தேதியுடன் பதிவு தேதி முடிந்துவிட்ட நிலையில் அன்று பங்கு வர்த்தகத்தில் ஸ்டைரெனிக்ஸ் பங்கு விலை 13% மேல் சரிந்துள்ளது. இப்போது ஸ்டைரெனிக்ஸ் பங்கு விலை 761 ரூபாயாக இருக்கிறது. மார்ச் 24ஆம் தேதி மட்டும் ஸ்டைரெனிக்ஸ் பங்கு விலை 116 ரூபாய் குறைந்துள்ளது.

எனவே, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வோருக்கு இந்த பங்கை வாங்குவதற்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 5 நாட்களில் ஸ்டைரெனிக்ஸ் பங்கு 16% சரிந்து 148 ரூபாய் குறைந்துள்ளது. எனினும், கடந்த ஒரு மாதத்தில் ஸ்டைரெனிக்ஸ் பங்கு 5.25% உயர்ந்துள்ளது.

ஸ்டைரெனிக்ஸ் பர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ் நிறுவனம் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பசை பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்