ஆப்நகரம்

தொடர்ந்து உயரும் சமையல் சிலிண்டர் விலை!

மானிய விலையில் கிடைக்கும் சமையல் சிலிண்டர் விலை கடந்த ஐந்து மாதங்களில் 35 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Mar 2020, 8:53 pm
இன்று (மார்ச் 18) மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது, சமையல் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், கடந்த 2019 அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரையில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.35.55 வரையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். 2019 அக்டோபர் 1ஆம் தேதி மானிய சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ.583.95 ஆக இருந்தது. அதன் விலை இப்போது ரூ.574.50 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil தொடர்ந்து உயரும் சமையல் சிலிண்டர் விலை


விலையேற்றத்துக்கான காரணம் எதையும் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் தெரிவிக்கவில்லை. அரசு தரப்புக் கொள்கையின்படி, நாடு முழுவதும் சந்தை விலையில்தான் சமையல் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால், குடும்பங்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வீதம் அரசு வழங்குகிறது. சமையல் சிலிண்டருக்கான மானியத் தொகையானது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக அரசு தரப்பிலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

கிராமங்களில் பிராட்பேண்ட்: ரூ.7 லட்சம் கோடி முதலீடு!

மானியமில்லா சிலிண்டர்களைப் பொறுத்தவரையில், சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகின்றன. அதேநேரம், மானிய சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.4 மற்றும் வரிகள் சேர்த்து உயர்த்தப்படுகிறது. இது குறித்த விவரங்களை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. ஆனால், மானியமில்லா சமையல் சிலிண்டர்களின் விலையானது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலேயே வெளியிடப்பட்டு வருவதாக தர்மேந்திர பிரதான் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்