ஆப்நகரம்

16 மணி நேரம் வேலையெல்லாம் வாய்ப்பில்லை.. சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

ஸ்விகி நிறுவனத்தின் புதிய ஊதிய திட்டத்தை எதிர்த்து சென்னையில் டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

Samayam Tamil 23 Sep 2022, 1:26 pm
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் (Swiggy) புதிய ஊதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால், டெலிவரி ஊழியர்கள் இல்லாமல் ஸ்விகி வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil swiggy employees chennai protest


முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி தனது டெலிவரி ஊழியர்களுக்கான ஊதிய திட்டத்தை மாற்றியுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

ஸ்விகி நிறுவனத்தின் புதிய ஊதிய திட்டத்தின்படி, டெலிவரி ஊழியர்கள் ஒரு வாரத்தில் 180 ஆர்டர்களை டெலிவரி செய்தால் மட்டுமே 11,500 ரூபாய் வருமானம் பெற முடியுமாம். மேலும், பெட்ரோல் விலை உயர்வை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஊதிய திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக டெலிவரி ஊழியர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணி பெண் படுகொலை.. மகிந்த்ரா பைனான்ஸ் ஏஜெண்டுகளை பயன்படுத்த ரிசர்வ் வங்கி தடை!
ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்வதெல்லாம் சாத்தியமில்லை எனவும், 16 மணி நேர வேலைக்கு ஸ்விகி அழுத்தம் கொடுப்பதாகவும் ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். எனவே, ஸ்விகி ஊழியர்கள் சென்னையில் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

புதிய ஊதிய திட்டம் என்ற பெயரால் ஊதியத்தை குறைக்கக்கூடாது, பழைய ஊதிய திட்டத்தை மாற்றக்கூடாது, PF, ESI போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விகி ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

இதனால் சென்னையில் ஸ்விகி டெலிவரி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரு தினங்களாக சென்னையில் ஸ்விகி சேவைகளே இல்லை என பல்வேறு வாடிக்கையாளர்கள் ட்விட்டரில் குறை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்