ஆப்நகரம்

350 பேருக்கு வேலை போச்சு... இது நியாயமா ஸ்விகி?

கொரோனா பாதிப்பால் 350 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Jul 2020, 1:58 pm
கொரோனா பரவலைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏராளமான தொழில் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, உணவகங்களின் தொழில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஆன்லைன் டெலிவரி உணவுகளையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி தனது ஊழியர்களில் 1100 பேரை மே மாதத்தில் பணிநீக்கம் செய்தது. வருவாய் இழப்புகள் தொடரும் பட்சத்தில் இதுபோன்ற இக்கட்டான முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியது.
Samayam Tamil swiggy layoff


இந்நிலையில் தற்போது, மேலும் 350 பேரைப் பணிநீக்கம் செய்வதாக ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திலேயே இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியதாகவும், இனி இதுபோன்ற பணிநீக்கம் இருக்காது எனவும் கூறியுள்ளது. கொரோனாவுக்கு முன்னர் ஆன்லைன் உணவு டெலிவரி துறை இருந்த சூழலில் இப்போது 50 சதவீதம் கூடத் திரும்பவில்லை என்று கூறியுள்ள ஸ்விகி, வருவாய் இழப்பும் நிதி நெருக்கடியும் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளது. பணிநீக்கம் மட்டுமல்லாமல் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கான சம்பளத்தையும் சமீபத்தில் ஸ்விகி நிறுவனம் குறைத்திருந்தது.

Debt funds என்றால் என்ன? எப்படி லாபம் சம்பாதிக்கலாம்?

திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சம்பளக் குறைப்பை எதிர்த்து டெலிவரி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் அல்லது சம்பளக் குறைப்பு செய்யப்படும் பணியாளர்களுக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று ஸ்விகி உறுதியளித்தது. பணிநீக்கம், சம்பளக் குறைப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஊழியர்களுக்கான காப்பீட்டு வசதியை ஸ்விகி அறிவித்திருந்தது. தங்களது பணியாளர்கள், டெலிவரி பங்குதாரர்கள், உள்ளூர் வியாபாரிகள், விநியோக ஒருங்கிணைப்பாளர்கள் போன்றோருக்கு கொரோனா சிகிச்சை காப்பீடு வழங்குவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதன்படி , ரூ.5 லட்சம் வரையில் சிகிச்சை காப்பீடு வழங்கப்படுகிறது.

Gold Rate in Chennai: அடக்கடவுளே... 40,000 ரூபாயைத் தாண்டிய தங்கம்!

காப்பீடு வழங்கினாலும் வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்வதும் சம்பளத்தைக் குறைப்பதும் அதன் பணியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து பணிநீக்கம் இருக்காது என்று கூறியிருந்தாலும் கொரோனா பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் பணிநீக்கமும் தொடரும் என்று அஞ்சப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்