ஆப்நகரம்

தமிழ்நாடு அரசு: வணிகவரித் துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்வு!

தமிழ்நாடு அரசின் வணிகவரித் துறை வருவாய் 1.17 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 Mar 2023, 12:41 pm
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn secretariat
தலைமை செயலகம் - TN secretariat


வணிகவரித் துறை வருவாய் உயர்வு

தமிழ்நாடு வணிகவரித் துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிகவரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வணிகவரித் துறையில் நடப்பு நிதியாண்டில் 28.2.2023 வரையிலான மொத்த வருவாய் 1,17,458.96 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் 92,931.57 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் 24,527.39 கோடி ரூபாயை வருவாயை வணிகவரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.

பதிவுத் துறை வருவாய்

அதே போன்று பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 28.2.2023 வரை பதிவுத் துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 15,684.83 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 12,161.51 கோடி ரூபாயை விட 3,523.32 கோடி ரூபாய் அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்த நடவடிக்கைகளால் வருவாய் வளர்ச்சி

வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்து வந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்