ஆப்நகரம்

வருவாய் பற்றாக்குறையைக் குறைத்த தமிழக அரசு.. பட்ஜெட்டில் பிடிஆர் தகவல்!

தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை தற்போதைய தமிழக அரசு குறிப்பிடத்தகுந்த அளவில் குறைத்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 20 Mar 2023, 12:00 pm
வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி மேலாண்மை குறித்து வெளியான அறிவிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil tamil nadu budget


நிதியமைச்சர் தனது பட்ஜெட் அறிவிப்பில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக‌ செலவுள்ள பல நலத்‌ திட்டங்களைச்‌ செயல்படுத்தி வரும் போதிலும்‌, முன்னெப்போதும் இல்லாத அளவில்‌ பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள்‌ பதவியேற்கும்‌ போது சுமார்‌ 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய்‌ பற்றாக்குறையை, நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்‌ சுமார்‌ 30,000 கோடி ரூபாய்‌ அளவிற்கு குறைத்துள்ளோம்‌.

இது, கோவிட்‌ பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-22 ஆம்‌ ஆண்டின்‌ பற்றாக்குறையை ஒப்பிட்டாலும்‌, ஏறத்தாழ 5௦௦௦ கோடி ரூபாய்‌ குறைவாகும்‌. வருவாய்‌ பற்றாக்குறையை அறவே அகற்ற வேண்டுமென்ற நிதிப்‌ பொறுப்புடைமைச்‌ சட்டத்தின்‌ இலக்கை எட்டிட, அரசின்‌ சமூக நலத் திட்டங்களுக்கும்‌ வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும்‌ எவ்வித பாதிப்புமின்றி, வரும்‌ ஆண்டுகளில்‌ வருவாய்ப்‌ பற்றாக்குறை படிப்படியாகக்‌ குறைக்கப்படும்‌.

பட்ஜெட்டில் வருமா நல்ல செய்தி? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
இந்த அரசு பதவியேற்றபோது சந்தித்த நிதி நெருக்கடிக்கு முக்கியக்‌ காரணம்‌, அதற்கு முந்தைய ஆண்டுகளில்‌ தமிழ்நாட்டின்‌ வரி வருவாயில்‌ ஏற்பட்ட விழ்ச்சியே ஆகும்‌. 2006 முதல்‌ 2011 வரையுள்ள ஆண்டுகளில்‌ மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில்‌ சராசரி எட்டு சதவீதமாக இருந்த மாநிலத்தின்‌ சொந்த வரி வருவாய்‌, கடந்த பத்து ஆண்டுகளில்‌ தொடர்ந்து வீழ்ச்சி கண்டு, 2020-21 ஆம்‌ ஆண்டு 5.58 சதவீதமாகக்‌ குறைந்தது.

மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மற்ற பெரிய மாநிலங்களுடன்‌ ஒப்பிடுகையில்‌, தமிழ்நாட்டில்‌ இந்த விகிதம்‌ குறைவாகவே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அரசு எடுத்த முயற்சிகளின்‌ பலனாக இந்த விகிதம்‌ 6 சதவிதமாக தற்போது உயர்ந்துள்ள போதிலும்‌, இதனை மேலும்‌ உயர்த்தி நலத் திட்டங்களுக்கான வருவாய்‌ ஆதாரங்களை ஈட்டிட முனைப்போடு செயல்படுவோம்‌” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்