ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம்: CPS ஒழிப்பு இயக்கத்தின் அடுத்த மூவ்.. கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 24 Feb 2023, 7:24 am
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான போராட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் அடுத்தகட்ட தீர்மானங்களை அறிவித்துள்ளனர்.
Samayam Tamil tamil nadu govt employees decided to protest by wearing black cloth over their eyes to implement old pension scheme
பழைய ஓய்வூதிய திட்டம்: CPS ஒழிப்பு இயக்கத்தின் அடுத்த மூவ்.. கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்!


சென்னையில் மாநாடு!

தமிழ்நாட்டில் இப்போது பங்களிப்பு ஓய்வூதிய (CPS) திட்டத்தில் பணி புரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாழ்க்கையை பாதுகாக்க திமுகவின் தேர்தல் வாக்குறுதியான CPS திட்டத்தை ரத்து செய்தல் என்னும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 11ஆம் தேதியன்று சென்னையில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்ற CPS ஒழிப்பு இயக்க மாநில மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் எப்போது?

வாக்குறுதியே அளிக்காத ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பணிக் கொடை வழங்கக் கோரியும் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநில அளவிலான கோரிக்கை மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

அனைவருக்கும் நன்றி!

பிப்ரவரி 11ஆம் தேதி சனிக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் தனது அறிக்கையில் நன்றி தெரிவித்திருந்தது.

முதல்வருக்கு கடிதம்!

தற்போது நடைமுறையில் இருக்கும் சிபிஎஸ் திட்டத்தை ஒழித்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முக்கியமான முடிவு!

பிப்ரவரி 11ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில்‌ உள்ள அண்ணா கலையரங்கில்‌ நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில்‌ முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானத்தில் சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்களைச்‌ சந்தித்து சிறப்பு கவன ஈர்ப்புத்‌ தீர்மானம்‌ கொண்டு வர முறையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

அரசு ஊழியர்‌, ஆசிரியர்களின்‌ வாழ்வாதாரக்‌ கோரிக்கையான புதிய ஒய்வூதியத்‌ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்‌ என்ற ஒற்றைக்‌ கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்‌ பேரவையில்‌ தாக்கல்‌ செய்யப்படும்‌ 2023-24ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌ ஒய்வூதியம்‌ தொடர்பான மானியக் கோரிக்கையின்‌ போது பங்களிப்பு ஓய்வூதியத்‌ திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்களையும்‌ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்‌ சந்தித்து இது தொடர்பாக சட்டப்‌ பேரவையில்‌ சிறப்பு கவன ஈர்ப்புத்‌ தீர்மானம்‌ கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி!

திமுகவின்‌ தேர்தல்‌ கால வாக்குறுதியான சிபிஎஸ் திட்டத்தை (புதிய ஓய்வூதியத்‌ திட்டம்‌) ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்‌ இயக்க நடவடிக்கை முன்னெடுக்க முடிவு.

கண்ணில் கருப்பு துணி!


09.03.2023 அன்று கண்ணில்‌ கருப்புத்‌ துணி கட்டி ஒற்றைக்‌ கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்‌ நடத்தப்பட உள்ளது.

தீர்மான விளக்க கூட்டம்!



01.04.2023, 08.04.2023, 15.04.2023 மற்றும்‌ 22.04.2023 ஆகிய தேதிகளில்‌ மாவட்ட அளவிலான மாநில கோரிக்கை மாநாட்டு தீர்மான விளக்கக்கூட்டம்‌ நடத்தப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம்!

20.05.2023 சிபிஎஸ் திட்டத்தில்‌ பணிபுரிந்து மாணமடைந்த குடும்ப உறுப்பினர்கள்‌ பங்கேற்கும்‌ மாநில அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

தலைநகரங்களில் பேரணி!

23.06.2023 (வெள்ளி) அன்று மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ பேரணி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்படுள்ளது. இந்த தீர்மானங்களை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மேற்கொண்டுள்ளது.

போராட்டம் தொடரும்!

உயிரைக் கொடுத்தேனும் தங்களுடைய ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்..!

காத்திருக்கும் ஊழியர்கள்!

ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கு பல்வேறு விஷயங்களில் முன்னுதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அமல்படுத்த யோசிப்பது ஏன் என்று தமிழக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு எப்போது நிறைவேற்றும் என்று இவர்கள் காத்திருக்கின்றனர்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்