ஆப்நகரம்

23 லட்சம் கோடி ரூபாய் முதலீடு.. தமிழக அரசின் டார்கெட் இதுதான்!

உற்பத்தி துறைக்கு 23 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Apr 2022, 7:55 pm
தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதுமட்டுமல்லாமல், புதிதாக ஏராளமான முதலீடுகளை கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்து துறை மையமாக இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil manufacturing


தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தின் வலுவான உற்பத்தி துறை அங்கீகரிக்கப்பட்ட ஒன்று எனவும், 2020-21ஆம் ஆண்டில் 48.1 பில்லியன் டாலராக இருந்த உற்பத்தி துறை 2030-21ஆம் ஆண்டில் 250 பில்லியன் டாலர் மதிப்பை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோக, தமிழக உற்பத்தி துறைக்கு 23 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இவ்வளவு முதலீடா!.. லிஸ்ட் போட்ட ஸ்டாலின்.. ஆடிப்போன சட்டமன்றம்!
2021-22ஆம் நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு 68,375 கோடி ரூபாய் மதிப்புள்ள 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கையும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியை தமிழக அரசு உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்