ஆப்நகரம்

Tata Consumer Q4 Results: டாடா கன்ஸ்யூமர் லாபம் 23% உயர்வு.. பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்!

Tata Consumer Q4 results 2023: டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் லாபம் மார்ச் காலாண்டில் 23% உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 25 Apr 2023, 6:00 pm
டாடா கன்ஸ்யூமர் (Tata Consumer Products) நிறுவனம் தனது மார்ச் காலாண்டு வருமான முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் காலாண்டில் டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் லாபம் 23.46% அதிகரித்து 268.59 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 217.54 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil tata consumer
tata consumer


வருவாயை பொறுத்தவரை டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் மார்ச் காலாண்டில் 3,618.73 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 13.96% வளர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் டாடா கன்ஸ்யூமர் நிருவனம் 3175.41 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.

தற்போது மார்ச் காலாண்டு வருமான முடிவுகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்ட் (Final dividend) தொகையாக ஒரு பங்குக்கு 8.45 ரூபாய் வழங்குவதற்கு டாடா கன்ஸ்யூமர் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.

டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் தொழில் 1% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மறுபுறம் காபி தொழில் 31% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியா ஃபுட்ஸ் பிரிவு 26% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் உள்நாட்டு தொழில் 15% வளர்ச்சியும், வெளிநாட்டு தொழில் 6% வளர்ச்சியும், பிராண்டட் அல்லாத தொழில்கள் 9% வளர்ச்சியும் பதிவு செய்துள்ளன.

டாடா ஸ்டார்பக்ஸ் (Tata Starbucks) வருவாய் 48% வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் டாடா ஸ்டார்பக்ஸ் 15 புதிய நகரங்களில் 71 ஸ்டோர்களை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 41 நகரங்களில் 333 டாடா ஸ்டார்பக்ஸ் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன.

இன்று பங்கு வர்த்தகம் முடிவில் டாடா கன்ஸ்யூமர் பங்கு விலை 734.95 ரூபாயாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்