ஆப்நகரம்

சம்பளத்தைக் குறைக்கும் டாடா நிறுவனம்!

கொரோனா பாதிப்பால் தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.

Samayam Tamil 11 May 2020, 8:23 pm
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அச்சத்தால் மார்ச் 25 முதல் மே 17 வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் பொதுமக்களுக்கும் தொழில் துறையினருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வருமானம் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் செய்வதறியாது திகைக்கின்றனர். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு துறைகளில் தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும் இன்னும் இயல்பு நிலை திரும்பாததால் நெருக்கடியான சூழலே நிலவுகிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது செலவைக் குறைக்கும் விதமாக சம்பளக் குறைப்பிலும், பணியாளர் குறைப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.
Samayam Tamil tata


பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமமும் தற்போது சம்பளக் குறைப்பில் இறங்கியுள்ளது. டாடா குழுமத்தின் சேய் நிறுவனங்களான இந்தியன் ஹோட்டல்ஸ் (தாஜ்), டாடா சியா ஏர்லைன்ஸ் (விஸ்தாரா), டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன்ஸ் போன்றவை ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதால் வேறு வழியின்றி சம்பளக் குறைப்பை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளன. இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் சார்பாக அதன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் இக்கட்டான முடிவுகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு லாபமா?

விஸ்தாரா விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 30 சதவீதத்தினரை சம்பளம் இல்லா விடுப்பில் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. செலவைக் குறைக்கும் நோக்கத்தில் ஏப்ரல் - மே மாதங்களில் சம்பளக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் தொடரும் பட்சத்தில் அடுத்து வரும் மாதங்களிலும் இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. விமானம் மற்றும் விருந்தோம்பல் துறையில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், தனது 4.5 லட்சம் ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்திவைத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடாக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கால் சம்பளக் குறைப்பை மேற்கொண்ட நிலையில் தற்போது டாடா குழுமமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்