ஆப்நகரம்

செலவானாலும் பரவாயில்ல.. இதை செஞ்சே ஆகணும்.. ஏர் இந்தியாவுக்கு டாடா எடுத்த முடிவு!

ஏர் இந்தியாவுக்கு புதிய விமானங்களை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Samayam Tamil 25 Feb 2022, 3:11 pm
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியுள்ளது. ஏர் இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கு டாடா பயங்கரமான திட்டங்களை வகுத்து வருகிறது.
Samayam Tamil air india


இதன் முதற்கட்டமாக துருக்கி நாட்டை சேர்ந்த இல்கர் ஐசியை ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக டாடா நியமித்தது. துருக்கி நாட்டை சேர்ந்த இல்கர் ஐசி டர்கிஷ் ஏர்லைன் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த வல்லுநர்.

இந்நிலையில், ஏர் இந்தியாவுக்கு புதிய விமானங்களை வாங்குவதற்காக போயிங், ஏர்பஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் ஏர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

தற்போது ஏர் இந்தியாவிடம் ஏர்பஸ், போயிங் என கலவையாக 140க்கு மேற்பட்ட விமானங்கள் உள்ளன. பழைய விமானங்களை புதுப்பிக்கவே சுமார் 100 கோடி டாலர் செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய விமானங்களை வாங்குவதற்கு டாடா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ஆத்தாடி.. எகிறி அடிக்கும் தங்கம்.. இனி நகையெல்லாம் கனவுல கூட வாங்க முடியாது!
இதுதொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஏர்பஸ் ஏ350-900, போயிங் 787-9 உள்ளிட்ட ரக விமானங்களை வாங்க டாடா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும், ஏற்கெனவே ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இத்துடன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது என நிதிச் சுமை நீடிக்கிறது. ஆனால், ஒரு முழுமையான மாற்றம் வேண்டுமென்றால் காலத்திற்கு ஏற்ப புதிய விமானங்களுக்கு மாற வேண்டுமென டாடா நிர்வாகம் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்