ஆப்நகரம்

இனி கார் வாங்குறது கஷ்டம்.. எக்குத்தப்பாக உயர்ந்த விலை!

கார்களின் விலையை இன்று முதல் உயர்த்துவதாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2022, 3:44 pm
நீங்கள் புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. நாடு முழுவதும் இப்போது பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், கார் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் வாகன தயாரிப்புக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால் அவ்வப்போது இதுபோல வாகனங்களின் விலையை உயர்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil car


இதுகுறித்து டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார்களின் விலை 0.55 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகவும், ஜூலை 9ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் நெக்சான், ஹேரியர், சஃபாரி உள்ளிட்ட பிரபலமாக கார்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்திலேயே வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியிருந்தது.

கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாகன உற்பத்தியும் விற்பனையும் பாதிக்கப்பட்டது. உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய இக்கட்டான சூழலுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், சர்வதேச அளவில் செமி கண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்