ஆப்நகரம்

பாதாளத்தில் விழுந்த டாடா... ஆனாலும் மார்க்கெட்டில் அசைக்கமுடியலையே!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை உயர்ந்துள்ளது.

Samayam Tamil 10 Jul 2020, 5:25 pm
ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த விற்பனையில் 64 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவரும் உள்ளடங்கும்.
Samayam Tamil டாடா மோட்டார்ஸ்


கடந்த ஜூன் காலாண்டில் உலகளவில் டாடா மோட்டார்ஸ் ஒட்டுமொத்தமாகவே 91,594 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 64 விழுக்காடு சரிவாகும்.

வர்த்தக வாகனங்கள் பிரிவை பொறுத்தவரை கடந்த ஜூன் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் வெறும் 11,598 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை காலாண்டுடன் ஒப்பிடுகையில் 89 விழுக்காடு சரிவாகும்.

பயணிகள் வாகனப் பிரிவை பொறுத்தமட்டில் ஜூன் காலாண்டில் உலகளவில் 79,996 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 49 விழுக்காடு சரிவாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் ஜூன் காலாண்டில் உலகளவில் 65,425 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதில் 17,971 ஜாகுவார் கார்களும், 47,454 லேண்ட் ரோவர் கார்களும் விற்பனையாகியுள்ளன.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விற்பனை சரிவையும் தாண்டி டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 0.61% உயர்ந்துள்ளது. நிஃப்டியில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ரூ.172.60ஆக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்