ஆப்நகரம்

Ford: ஃபோர்டு ஆலையை கைப்பற்றும் டாடா மோட்டார்ஸ்!

ஃபோர்டு ஆலையை கைப்பற்றுவதற்கு டீலை முடித்த டாடா மோட்டார்ஸ்.

Samayam Tamil 29 May 2022, 1:06 pm
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்துக்கு (Ford Motors) இந்தியாவில் இரண்டு ஆலைகள் உள்ளன. சென்னை அருகே மறைமலை நகரிலும், குஜராத் மாநிலம் சனந்திலும் ஃபோர்டு ஆலைகள் இயங்கி வருகின்றன.
Samayam Tamil Ford Plant


பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்புக்கு ஆபத்து நேரிடும் என அச்சம் எழுந்தது.

இதையடுத்து ஃபோர்டு ஆலைகளை விலைக்கு வாங்க சில இந்திய நிறுவனங்கள் முயற்சித்தன. மேலும், ஃபோர்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமில்லை என ஃபோர்டு தெரிவித்தது.

100 ரூபாய் நோட்டு ரொம்ப புடிக்கும்.. ரூ.2000 நோட்டுக்கு குட்பை.. இந்தியர்களின் கரன்சி சாய்ஸ்!
இந்நிலையில், குஜராத்தில் சனந்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி டீலை முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஃபோர்டு ஆலையை டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்குவதற்கு குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, நாளை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் ஃபோர்டு, டாடா மோட்டார்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்