ஆப்நகரம்

AirAsia offer: கம்மி விலையில் ஜாலியா விமானத்தில் போகலாம்.. ஏர்ஏசியா டிக்கெட் சலுகை!

ஏர்ஏசியா நிறுவனம் கோடைக்காலத்தை முன்னிட்டு விமான டிக்கெட் சலுகை அறிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 22 Feb 2023, 1:08 pm
டாடா குழுமத்தை சேர்ந்த ஏர்ஏசியா (AirAsia India) நிறுவனம் சென்னை வரும் பயணிகளுக்கு விமான டிக்கெட் தள்ளுபடி வழங்குகிறது. கோடைக்காலம் நெருங்கி வரும் சூழலில் ஏர்ஏசியா நிறுவனம் இந்த சிறப்பு சலுகையை வழங்குகிறது.
Samayam Tamil airasia india
airasia india


இந்த சலுகையின் கீழ் மும்பை - சென்னை வழித்தடத்தில் 1400 ரூபாய் முதல் விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது ஏர்ஏசியா நிறுவனம். பிப்ரவரி 24ஆம் தேதி வரை இந்த சலுகை கிடைக்கும். எனவே, விமான டிக்கெட் தள்ளுபடி பெற விரும்புவோர் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் புக்கிங் செய்துவிட வேண்டும்.

மார்ச் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் உங்களுக்கு விருப்பமான தேதியில் விமான பயணத்துக்கு டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். https://www.airasia.co.in இணையதளத்திலும், ஏர்ஏசியா மொபைல் ஆப்பிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இதுமட்டுமல்லாமல், டாடா நியூ (Tata Neu) பயனாளிகளும் மொபைல் ஆப் வாயிலாக ஏர்ஏசியா விமான டிக்கெட் சலுகை விலையில் புக்கிங் செய்யலாம். இதில் டாடா நியூ பயனர்களுக்கு ஏர்ஏசியா விமான டிக்கெட்டில் 8% வரை Newcoin சலுகையும் கிடைக்கும்.

ஏர்ஏசியா நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. நாட்டின் 19 நகரங்களுக்கு நேரடியாக 50 விமானங்களையும், 100 தொடர்பு விமானங்களையும் ஏர்ஏசியா இயக்கி வருகிறது.

கோடைக்காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வோர், சுற்றுலா பயணங்களை திட்டமிடுவோர் இந்த சலுகையை பயன்படுத்தி குறைந்த செலவில் விமானத்தில் பயணிக்கலாம். இதேபோல ஏற்கெனவே இண்டிகோ, விஸ்டாரா ஆகிய நிறுவனங்களும் விமான டிக்கெட் சலுகைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்