ஆப்நகரம்

கொரோனாவை எதிர்க்கும் கார்பரேட் நிறுவனங்கள்!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வரும் நிலையில், டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

Samayam Tamil 28 Mar 2020, 8:48 pm
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரையில் 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அரசு தரப்பிலிருந்து தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியாக சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil டாடா கொரோனா


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசு மட்டுமல்லாமல் தொழில் துறை தரப்பிலிருந்தும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. கார்பரேட் நிறுவனங்கள் பல தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றன. இதற்குப் பக்க பலமாக கொரோனா பாதிப்புக்காக கார்பரேட் நிறுவனங்கள் செலவிடும் தொகையானது கார்பரேட் சமூகப் பொறுப்பு நிதியாகக் கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடியும், வேதாந்தா நிறுவனம் ரூ.100 கோடியும் வழங்குவதாக அறிவித்தன.

கொரோனாவை எதிர்க்கும் டிவிஎஸ்: ரூ.30 கோடி நிதியுதவி!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் அறக்கட்டளை வாயிலாக 100 படுக்கைகள் கொண்டு பிரத்தியேக மருத்துவமனை ஒன்றை கொரோனா நோயாளிகளுக்காக அமைத்துள்ளார். டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான ஓலா, தனது ஊழியர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.50 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.


இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனம் கொரோனா பாதிப்பு சீரமைப்புக்காக ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. டாடா அறக்கட்டளையின் தலைவரான ரத்தன் டாடா தன் பங்குக்கு ரூ.500 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் பாதிப்புகள் மிக மோசமடைந்துள்ளதாகவும், அதற்கு எதிரான போராட்டத்தில் முழு ஆதரவும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்