ஆப்நகரம்

ஏர் இந்தியாவின் புதிய தலைவர் இவர்தான்.. யார் இந்த கேம்பெல் வில்சன்?

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக கேம்பெல் வில்சன் நியமனம்.

Samayam Tamil 12 May 2022, 4:12 pm
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் கேம்பெல் வில்சன் (Campbell Wilson) நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Campbell Wilson


ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து கடந்த ஜனவரி மாதம் டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது. ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த ஏர்லைன் நிறுவனமாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை டாடா சன்ஸ் பரிசீலித்து வந்தது.

முதலில் ஏர் இந்தியாவுக்கு நல்ல தலைமை நியமிக்க டாடா சன்ஸ் முடிவு செய்தது. எனவே டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான இல்கர் ஐசியை நியமிக்க டாடா சன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இல்கர் ஐசி ஏர் இந்தியா தலைமை பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

நம்ம மக்களுக்காக செஞ்சேன்.. ரத்தன் டாடா உருக்கம்!
இந்நிலையில், ஏர்லைன் துறையில் அனுபவம் வாய்ந்த கேம்பெல் விலசனை ஏர் இந்தியாவின் தலைமை அதிகாரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூ சிலாந்து நாட்டில் பிறந்த கேம்பெல் வில்சனுக்கு தற்போது வயது 50.

இவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ஏர்லைன் நிறுவனமான ஸ்கூட் (Scoot) நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் ஜூன் 15ஆம் தேதி தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக கேம்பெல் வில்சனை நியமிப்பதற்கு ஏர் இந்தியா நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிசிஏ அனுமதியும் கிடைத்தபின் அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா தலைமை பொறுப்பை கேம்பெல் வில்சன் ஏற்பார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்