ஆப்நகரம்

குவார்ட்டர் முதல் பீர் வரை.. மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு!

மதுபானங்களின் விலையை தெலங்கானா மாநில அரசு தடாலடியாக உயர்த்தியுள்ளது.

Samayam Tamil 20 May 2022, 1:39 pm
தெலங்கானா மாநில அரசு மதுபானங்களின் விலையை 20% முதல் 25% வரை உயர்த்தியுள்ளது. வருவாயை பெருக்குவதற்காக தெலங்கானா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
Samayam Tamil alcohol


அனைத்து பிராண்டுகளின் மதுபானங்களின் விலையும் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானா அரசுக்கு ஆண்டுதோறும் 6000 கோடி ரூபாய் முதல் 7000 கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22ஆம் நிதியாண்டில் மதுபான விற்பனை வாயிலாக தெலங்கானா அரசு 30,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில் வரி வருவாயாக மட்டும் 12,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

Post Office கணக்குதாரர்களுக்கு புது வசதி.. இனி இதெல்லாம் கிடைக்கும்!
இந்நிலையில் வருவாயை மேலும் பெருக்குவதற்காக மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது தெலங்கானா அரசு. இதன்படி, 1000 மில்லி மதுபானத்தின் விலை 120 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 495 ரூபாயில் இருந்து 615 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு குவார்டர் மதுபாட்டில் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. எல்லா வகை பீர்களின் விலை குறைந்தபட்சம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி முதல் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எல்லா பார்கள், ஒயின் ஷாப், பப் உள்ளிட்ட இடங்களில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே கையிருப்பில் உள்ள மதுபானங்களும் புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்