ஆப்நகரம்

ஆதார் கார்டில் அப்டேட்.. இன்னும் ஒரு வாரம் தான் டைம்!

ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 8 Jun 2023, 4:07 pm
ஆதார் கார்டு என்பது 12 இலக்க எண் கொண்ட ஒரு அடையாள அட்டையாகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; பணம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் ஆதார் கார்டின் முக்கியத்துவம் உள்ளது. பான் கார்டு, வங்கிக் கணக்கு, சிலிண்டர் இணைப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும்.
Samayam Tamil aadhaar


ஆதார் கார்டில் அப்ட்டேட் செய்வது சுலபமான ஒன்றுதான். சில அப்டேட்களை வீட்டில் இருந்தபடியே நீங்களே செய்துவிடலாம். ஆனால் மொபைல் நம்பர் போன்ற விஷயங்களுக்கு ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றே அப்டேட் செய்ய முடியும். ஆதார் சேவை மையத்தில் சில அப்டேட்களுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பெரும்பாலான அப்டேட்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.

சிலர் ஆதார் அப்டேட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமே என்று அப்டேட் செய்யாமலேயே விட்டுவிடுவார்கள். ஆனால் ஆதார் கார்டு விவரங்கள் எப்போதுமே அப்டேட்டுடன் இருப்பது அவசியம். அதற்கு ஆதார் அமைப்பு (UIDAI) ஒரு வாய்ப்பு வழங்கியது. அதாவது ஆதார் கார்டில் இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குள் வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்துகொள்ள ஆதார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதுகுறித்து ட்விட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் கார்டில் அப்டேட் எதுவும் செய்யாமல் இருந்தால் அதை அப்டேட் செய்ய வேண்டும் எனவும், அதற்கு தேவையான ஆவணங்களை வழங்கி இலவசமாக அப்டேட் செய்யுமாறு ஆதார் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்