ஆப்நகரம்

ஆறு நாள் வங்கிகளுக்கு விடுமுறை.. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு!

இந்த வாரம் ஆறு நாட்கள் வங்கி விடுமுறை வருகிறது. முழு விவரம் இதோ..

Samayam Tamil 8 Aug 2022, 4:43 pm
பணப் பரிவர்த்தனை போன்ற பல்வேறு விஷயங்களுக்கு வங்கிகள் நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினங்கள் போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தால் அதற்கேற்ப நமது வேலைகளை முடிக்கலாம்.
Samayam Tamil bank leave


இந்த வாரத்தில் மொத்தம் ஆறு நாட்கள் வங்கி விடுமுறை வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இது பொருந்தாது. உள்ளூர் விடுமுறைக்காக ஒரு சில இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 - முகரம் (ஜம்மு, ஸ்ரீநகர்)

ஆகஸ்ட் 9 - முகரம் (அகர்தலா, அகமதாபாத், அசைவால், பிலாபூர், நாக்பூர், டெல்லி, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, ராய்பூர், ராஞ்சி)

ஆகஸ்ட் 11 - ரக்‌ஷா பந்தன் (அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்பூர், சிம்லா)

ஆகஸ்ட் 12 - ரக்‌ஷா பந்தன் (கான்பூர், லக்னோ)

ஆகஸ்ட் 13 - தேசப்பற்று நாள் (இம்பால்), 2ஆவது சனிக்கிழமை

ஆகஸ்ட் 14 - ஞாயிறு

ஆகஸ்ட் 15 - சுதந்திர தினவிழா (இந்தியா முழுவதும்)

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை.. இவ்வளவு நாட்கள் லீவா.. முழு லிஸ்ட்!
அடுத்த வாரத்திலும் நிறைய விடுமுறை நாட்கள் வருகின்றன. ஆகஸ்ட் 19ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 21ஆம் தேதி ஞாயிறு, ஆகஸ்ட் 27ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை, ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிறு, ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை வருகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக நிறைய விடுமுறைகள் வருகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்