ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு FD அதிக வட்டி.. இந்த வங்கிகளில் கண்டிப்பா கிடைக்கும்!

சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி வழங்கும் 10 வங்கிகள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 Feb 2023, 11:40 am
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக, சீனியர் சிட்டிசன்கள் பாதுகாப்பான நிலையான வருமானம் பெற வேண்டும் என்பதற்காக ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை போடுகின்றனர். சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்டில் அதிக வட்டி வருமானம் தரும் சில வங்கிகளை பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil these banks are offering over eight percent interest rate for senior citizen fixed deposits
சீனியர் சிட்டிசன்களுக்கு FD அதிக வட்டி.. இந்த வங்கிகளில் கண்டிப்பா கிடைக்கும்!


வட்டியை உயர்த்தும் வங்கிகள்

ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்திக்கொண்டே வருகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி முடிவடைந்த ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தி வருகின்றன.

சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம்

சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் அதிக முதலீடு செய்வதால் இயல்பாகவே பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும். இந்நிலையில், தற்போது வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தி வருவதால் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வருமானம் கிடைக்கிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்டில் 8% மேல் வட்டி வழங்கும் வங்கிகளை பார்ப்போம்.

பந்தன் வங்கி

600 நாட்கள் : 8.50%

யெஸ் பேங்க்

35 மாதம் : 8.25%

25 மாதம் : 8%

ஆக்ஸிஸ் பேங்க்

2 ஆண்டு - 30 மாதம் : 8.01%

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்

18 மாதம் - 3 ஆண்டு : 8%

இண்டஸ் இண்ட் பேங்க்

2 ஆண்டு 1 மாதம் - 2 ஆண்டு 6 மாதம் : 8.25%

2 ஆண்டு 6 மாதம் - 2 ஆண்டு 9 மாதம் : 8.25%

2 ஆண்டு 9 மாதம் - 3 ஆண்டு 3 மாதம் : 8.25%

3 ஆண்டு 3 மாதம் - 61 மாதங்கள் : 8%

சூர்யோதய் வங்கி

1 ஆண்டு 6 மாதம் - 2 ஆண்டு : 8.51%

2 ஆண்டு - 998 நாட்கள் : 8.01%

999 நாட்கள் : 8.76%

ஆர்பிஎல் வங்கி

453 நாட்கள் - 459 நாட்கள் : 8.30%

460 நாட்கள் - 724 நாட்கள் : 8.30%

725 நாட்கள் : 8.30%

டிசிபி பேங்க்

18 மாதம் - 700 நாட்கள் : 8%

700 நாட்கள் : 8%

700 நாட்கள் - 36 மாதம் : 8.35%

36 மாதம் : 8.35%

36 மாதம் - 60 மாதம் : 8.10%

60 மாதம் - 120 மாதம் : 8.10%

எக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

888 நாட்கள் : 8.5%

உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்

80 வாரம் : 8.75%

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்