ஆப்நகரம்

கார் வாங்க சூப்பர் வாய்ப்பு... இதை மிஸ் பண்ணிடாதீங்க!

செகேண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்கு இந்த வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன.

Samayam Tamil 16 Sep 2021, 11:27 pm
நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சத்தால் பொதுமக்கள் முடிந்த வரையில் பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்கின்றனர். சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக பைக், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலேயே பயணிக்க விரும்புகின்றனர். கார் இல்லாதவர்கள் புதிதாக கார் வாங்கத் திட்டமிடுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகை கொடுத்து கார் வாங்குவது கடினமான ஒன்றுதான். எனவே கார் வாங்க ஏதேனும் சிறப்புச் சலுகைகள் கிடைக்குமா என்று பலர் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், சிலர் செகேண்ட் ஹேண்ட் கார் இருந்தாலும் போதும் என்று முடிவுசெய்கின்றனர்.
Samayam Tamil car


அவ்வாறு செகேண்ட் ஹேண்ட் கார் வாங்க நினைப்பவர்களுக்காகவே முன்னணி வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 5 ஆண்டுகள் வரம்பு கொண்ட கடன்களுக்கு 9.50 சதவீதம் முதல் 10.50 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. அதேநேரம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் வெறும் 8.30 சதவீதத்துக்கு கார் கடன் (செகேண்ட் ஹேண்ட் கார்) வாங்கலாம். இதற்கான கால வரம்பு 5 ஆண்டுகள்.

கார்களை திரும்பப் பெறும் மாருதி சுஸுகி! உங்க கிட்ட இந்த கார் இருக்கா?
அதேபோல, ஐசிஐசிஐ வங்கியில் 12 சதவீதம் முதல் 14.40 சதவீதம் வரை வட்டி நடைமுறையில் உள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கியில் 7 ஆண்டுகள் வரையிலான கார் கடன்களுக்கு 13.75 சதவீதம் தொடங்கி 16 சதவீதம் வரையில் வட்டி உள்ளது. ஆக்சிஸ் வங்கியின் வட்டி விகிதம் 14.25 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை உள்ளது. டாடா கேப்பிட்டல் நிதி நிறுவனத்தில் 15 சதவீத வட்டியில் செகேண்ட் ஹேண்ட் காருக்கு கடன் கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்