ஆப்நகரம்

நகைய வச்சு கடன் வாங்கப் போறீங்களா? இதெல்லாம் முக்கியம்!

நகைக் கடன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்...

Samayam Tamil 4 Jul 2021, 9:53 pm
இந்தியர்களுக்கு நகைகள் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். அழகுசாதனப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டுப் பொருளாகவும் தங்கம் உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை வாங்கி வைத்தால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும் என்பதால் எப்படியாவது சிறுகச் சிறுகச் சேமித்து தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும் என்று பலர் இருப்பார்கள். அவசர காலத்தில் தங்கத்தை வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரது வீட்டிலும் கிட்டத்தட்ட அத்தியாவசியப் பொருளாகவே தங்கம் இருக்கிறது.
Samayam Tamil gold loan


தற்போதைய கொரோனா சமயத்தில் பலர் நிதி நெருக்கடியால் தங்களிடம் உள்ள நகையை வைத்து கடன் வாங்குகின்றனர். அவசர அவசரமாக நகையை வைத்து பணம் வாங்கும் பலர் நகைக் கடன் தொடர்பான சில விவரங்களைப் பார்க்காமலேயே கடன் வாங்குகின்றனர். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்...

>> தங்கக் கடன் என்பது குறுகிய காலக் கடனாகும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான கால வரம்பில்தான் இந்தக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. எனவே அதற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

>> நகைக் கடனை நீங்கள் வங்கி, நிதி நிறுவனம், நகைக் கடை எனப் பல்வேறு இடங்களில் வாங்கலாம். வங்கிகள் என்பவை பொதுவாகவே நம்பிக்கையானவை. ஆனால் மற்ற இடங்களில் நீங்கள் நகைக் கடன் வாங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனம் குறித்து நன்கு தெரிந்துகொண்டு வாங்க வேண்டும். குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்பதற்காக எவ்வித விசாரணையும் இல்லாமல் வாங்கிவிடக் கூடாது.

>> நகையின் மொத்த மதிப்புக்கும் உங்களுக்கு கடன் கிடைக்காது. குறைந்தபட்சம் 60 சதவீதம் முதல் அதிகபட்சம் 90 சதவீதம் வரையில் கடன் கிடைக்கும்.

>> தங்க நகைக் கடன்களுக்கான செயல்பாட்டுக் கட்டணம் வெவ்வேறு அளவாக இருக்கிறது. பொதுவாக வங்கிகள் 2 சதவீதம் வரையில் வசூலிக்கின்றன. எனவே செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதைப் பல்வேறு வங்கிகளில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்