ஆப்நகரம்

இந்த காசு உங்க கிட்ட இருந்தா நீங்க லட்சாதிபதி!

பழைய 2 ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் பணம் கிடைக்கும்.

Samayam Tamil 12 Oct 2021, 3:30 pm
பழைய நாணயங்களுக்கு பல்வேறு வலைதளங்களில் நிறைய பணம் கிடைக்கும் என்று செய்திகள் சமீபமாகவே அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. அரிய வகை நாணயங்களுக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைக்கிறது. இதுபோன்ற சில வெப்சைட்களில் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் விற்பதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது. நீங்களும் அந்த அதிருஷ்டசாலியாக இருக்கலாம்.
Samayam Tamil 2 rupee coin


நீங்கள் பழைய நாணயங்களைச் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரலாம். 2 ரூபாய் நாணயம் இருந்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும். 1994 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரிய வகை 2 ரூபாய் நாணயத்துக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் நீங்கள் ரூ.10 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். இந்த இரண்டு நாணயங்களுக்கு பின்பிறமும் இந்திய தேசிய கொடி மற்றும் இந்திய வரைபடம் இருக்க வேண்டும். இதை விற்பனை செய்ய எங்கும் அலையத் தேவையில்லை. உங்களிடம் இந்த நாணயம் இருந்தால் அதை Quikr வெப்சைட்டில் விற்கலாம். முதலில் நீங்கள் அந்த வெப்சைட்டில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். பின்னர் உங்களிடம் உள்ள நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.

முதலீடு செய்ய சிறந்த இடம்! உடனே கிளம்புங்க!
1862ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விக்டோரியா மகாராணியின் உருவம் அச்சிடப்பட்ட நாணயத்துக்கு ரூ.1.5 லட்சம் வரையில் பணம் கிடைக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களுக்கும் நிறையப் பணம் கிடைத்தது. வைஷ்ணோ தேவி மாதாவின் உருவம் அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை விலைபோனதாகத் தகவல்கள் வெளியாகின.

அடுத்த செய்தி

டிரெண்டிங்