ஆப்நகரம்

ஏடிஎம் கட்டணம் திடீர் உயர்வு.. வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

மே மாதம் முதல் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை இந்த தனியார் வங்கி உயர்த்தியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 1 May 2023, 5:53 pm
தனியார் துறை வங்கியான கோடக் மஹிந்திரா பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கான டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது 2023 மே 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர டெபிட் கார்டு கட்டணத்தில் 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கோடக் மஹிந்திரா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.199 மற்றும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
Samayam Tamil atm


இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் என்பது கோடக் மஹிந்திரா வங்கியின் அனைத்து கணக்கு வகைகளுக்கும் பொருந்தும். மே 22 முதல் அமுலுக்கு வரும் டெபிட் கார்டு கட்டணங்களின் சமீபத்திய உயர்வு குறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி பல்வேறு வகையான சேமிப்புக் கணக்குகள் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் விரும்பும் கணக்கு, கடன் வரம்பு மற்றும் சேவைகளைப் பொறுத்து இந்தக் கட்டணங்கள் இருக்கும்.

ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வங்கிக் கட்டணங்கள்:

>> குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறியதற்கான கட்டணம் 6% வரை இருக்கும். அதிகபட்சம் 600 ரூபாய் வரை.

>> நிதி சாராத காரணங்களுக்காக வழங்கப்பட்டு திரும்பும் காசோலைகளுக்கு ஒவ்வொரு முறையும் 50 ரூபாய் கட்டணம்.

>> டெபாசிட் செய்து திரும்பிய காசோலையின் ஒவ்வொரு முறைக்கும் 200 ரூபாய் கட்டணம்.

>> தொலைந்த அல்லது திருடப்பட்ட டெபிட் கார்டை மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 200.

>> போதுமான பணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்ட உள்நாட்டில் ஏடிஎம்மில் பணம் எடுப்பத்தலுக்கு 25 ரூபாய் கட்டணம்.

>> ஒரு மாதத்திற்கு ஒரு கார்டு இல்லா பணத்தை எடுப்பதற்கு கட்டணம் எதுவும் இல்லை; அதைத் தாண்டி எடுத்தால் ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்