ஆப்நகரம்

உடனே போஸ்ட் ஆபீஸ் ஓடுங்க.. பணத்தை அள்ளிட்டு வாங்க!

இரு மடங்கு பெருகும் பணம்!

Samayam Tamil 23 Mar 2022, 11:52 am
தபால் நிலையத்தில் உள்ள இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தே நீங்கள் லட்சாதிபதியாகலாம். முழு விவரம் உள்ளே...
Samayam Tamil time deposit scheme of post office scheme will give lakhs in return check details
உடனே போஸ்ட் ஆபீஸ் ஓடுங்க.. பணத்தை அள்ளிட்டு வாங்க!



சூப்பரான திட்டம்!

வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்க இந்தியத் தபால் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் அதிக லாபத்தைத் தரும். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் ’போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்’ திட்டம்.

அதிக வட்டி லாபம்!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை விட இந்த சேமிப்புத் திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கிறது. இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டு சேமிப்புக்கு 6.7 சதவீத வட்டி கிடைக்கிறது. நீங்கள் தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால் 5.5 சதவீத வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 6.7 சதவீதத்தில் வட்டியைப் பெறலாம்.

இரு மடங்கு பெருகும் பணம்!

எந்தவொரு தனிநபரும் இத்திட்டத்தின் கீழ் தங்களது கணக்கைத் திறக்க முடியும். அதேபோல, பெற்றோர்கள் 10 வயதுக்கு மேற்பட்ட தங்களது குழந்தைகளின் பெயரில் ஒரு கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 80 சி-இன் கீழ் வரி விலக்கின் பயனை வழங்குகிறது என்பது கூடுதல் சிறப்பு. நீங்கள் முதலீடு செய்யும் பணம் 129 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்