ஆப்நகரம்

கெத்து காட்டிய ஏழுமலையான்.. திருப்பதி உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

மே மாதம் முதல் 4 நாட்களில் திருப்பதி உண்டியல் வசூல் எவ்வளவு?

Samayam Tamil 5 May 2022, 3:38 pm
மிகப்பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியல் வசூலில் எப்போதுமே ராஜாதான். ஏழுமலையானை தரிசிப்பதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், மே மாதத்தின் முதல் 4 நாட்களிலேயே வசூல் களைகட்டியுள்ளது திருப்பதி ஏழுமலையான் கோயிலில்.
Samayam Tamil tirupati temple hundi collections at 17 2 crore rupees from may 1st to 4th
கெத்து காட்டிய ஏழுமலையான்.. திருப்பதி உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?


​மே 1

மே 1ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 75,010. பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் தரிசனம் செய்துள்ளனர். அன்று மட்டும் 4.70 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது.

​மே 2

மே 2ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 65,756 பக்தர்கள் வந்துள்ளனர். அன்று மட்டும் 4.60 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது. பக்தர்கள் சராசரியாக 6 மணி நேரம் தரிசனம் செய்துள்ளனர்.

​மே 3

மே 3ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய 67,577 பக்தர்கள் வந்துள்ளனர். அன்று மட்டும் 4.06 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது.

​மே 4

மே 4ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு 69,603 பக்தர்கள் வந்துள்ளனர். அன்று மட்டும் 3.84 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது.

​மொத்த வசூல்

மே 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் மொத்தம் 17.2 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்