ஆப்நகரம்

வெறும் 15 நிமிடத்தில் ரூ.400 கோடி லாபம்.. ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு பணத்தை கொட்டிய 2 பங்குகள்!

டைட்டன், டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஏற்றத்தால் ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு 15 நிமிடத்தில் 400 கோடி ரூபாய் லாபம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 Apr 2023, 6:00 pm
டைட்டன் (Titan), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகிய இரண்டு பங்குகளால் வெறும் 15 நிமிடத்தில் 400 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளார் ரேகா ஜுன்ஜுன்வாலா (Rekha Jhunjhunwala).
Samayam Tamil rekha jhunjhunwala
rekha jhunjhunwala


பிரபல பங்கு சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவரிடம் இருந்த பங்குகள் உள்ளிட்ட சொத்துகள் அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கின்றன.

இந்நிலையில், இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் வெறும் 15 நிமிடங்களில் டைட்டன், டாடா மோட்டார்ஸ் ஆகிய இரண்டு டாடா பங்குகளால் 400 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளார் ரேகா ஜுன்ஜுன்வாலா. ஏற்கெனவே அண்மை நாட்களாக ரேகாவின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதுமே டைட்டன் பங்கு விலை சுமார் 50 ரூபாய் உயர்ந்தது. டைட்டன் நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு 5.17% பங்கு உள்ளது. அதாவது 4,58,95,970 டைட்டன் பங்குகளை ரேகா ஜுன்ஜுன்வாலா வைத்திருக்கிறார். ஆக, 15 நிமிடத்தில் டைட்டன் பங்கு விலை உயர்வால் ரேகா ஜுன்ஜுன்வாலா சொத்து மதிப்பு சுமார் 230 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

மறுபக்கம், இன்று டாடா மோட்டார்ஸ் பங்கு விலையும் அட்டகாசமாக உயர்ந்துள்ளது. டாடா கார் விற்பனை உயர்ந்ததாலும், டாடா மோட்டார்ஸ் பங்குக்கு சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனங்கள் பாசிட்டிவ் ரேட்டிங் கொடுத்ததாலும் இன்று டாடா மோட்டார்ஸ் பங்கு நல்ல ஏற்றம் கண்டது.

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கி 15 நிமிடங்களில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை சுமார் 32.75 ரூபாய் உயர்ந்துவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு 1.57% பங்கு உள்ளது. அதாவது ரேகாவிடம் 5,22,56,000 டாடா மோட்டார்ஸ் பங்குகள் உள்ளன. ஆக, டாடா மோட்டார்ஸ் பங்கு விலை உயர்வால் 15 நிமிடத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலா சொத்து மதிப்பு சுமார் 170 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

எனவே, டைட்டன் பங்கு விலை ஏற்றத்தால் 230 கோடி ரூபாய், டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ஏற்றத்தால் 170 கோடி ரூபாய் என இரண்டு டாடா பங்குகளால் வெறும் 15 நிமிடத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலா சொத்து மதிப்பு மொத்தம் 400 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்