ஆப்நகரம்

LIC பாலிசிதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு.. உடனே இதை முடிக்கணும்!

எல்ஐசி பாலிசிதாரர்கள் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க இன்று கடைசி நாள்.

Samayam Tamil 25 Mar 2022, 1:52 pm
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்துள்ளனர். எனினும், உரிய தேதியில் பிரீமியம் செலுத்தாமல் விட்ட பாலிசிகள் காலாவதியாகிவிடும்.
Samayam Tamil LIC


இவ்வகையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்வதற்கான சிறப்பு புதுப்பிப்பு முகாமை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் எல்ஐசி நிறுவனம் தொடங்கியது. இந்த சிறப்பு முகாம் இன்றுடன் (மார்ச் 25) முடிவுக்கு வருகிறது.

எனவே, காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு இன்றே கடைசி தேதியாகும். இந்த சிறப்பு முகாமில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தாமல் விட்ட பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.

சம்பளம் வாங்காத ரகுராம் ராஜன்.. பிடிஆர் சொன்ன ரகசியம்!
கொரோனா நெருக்கடி காலகட்டம் என்பதை கருத்தில் கொண்டு பாலிசிகளை புதுப்பிப்பதற்கான தாமதக் கட்டணம் உள்ளிட்டவற்றில் சலுகை வழங்கப்படுகிறது. செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம்களின் அடிப்படையில் சலுகை வழங்கப்படும்.

பாலிசியை புதுப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு செல்லலாம். அல்லது ஆன்லைனிலும் https://licindia.in/ இணையதளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்