ஆப்நகரம்

தக்காளி விலை உயர்வு... கவலையில் மக்கள்!

சென்னையில் இன்று தக்காளி விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

Samayam Tamil 18 Jul 2021, 11:27 am
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் காய்கறிகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து விலையேற்றம் காணப்படுகிறது. இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கோயம்பேடு சந்தை மொத்த விலை நிலவரப்படி இன்றைய காய்கறி விலை என்ன என்று பார்க்கலாம்.
Samayam Tamil tomato price


சென்னையில் இன்று (ஜூலை 18) ஒரு கிலோ தக்காளி 12 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில்தான் விற்பனையானது. ஒரு கிலோ பீன்ஸ் விலை 40 ரூபாய்க்கு எகிறியுள்ளது. அவரைக்காய் 40 ரூபாய்க்கும், கேரட் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate in Chennai: இன்னைக்கு தங்கம் விலை இதுதான்!

முழு விலைப் பட்டியல் இதோ...

தக்காளி - ரூ.15
வெங்காயம் - ரூ.18
அவரைக்காய் - ரூ.40
பீன்ஸ் - ரூ.40
பீட்ரூட் - ரூ.20
வெண்டைக்காய் - ரூ.30
நூக்கல் - ரூ.15
உருளைக் கிழங்கு - ரூ.13
முள்ளங்கி - ரூ.10
புடலங்காய் - ரூ.15
சுரைக்காய் - ரூ.10
பாகற்காய் - ரூ.20
கத்தரிக்காய் - ரூ.10
குடை மிளகாய் - ரூ.20
கேரட் - ரூ.45
காளிபிளவர் - ரூ.20
சவுசவு - ரூ.11
தேங்காய் - ரூ.20
வெள்ளரிக்காய் - ரூ.6
முருங்கைக்காய் - ரூ.20
இஞ்சி - ரூ.40
பச்சை மிளகாய் - ரூ.27
கோவைக்காய் - ரூ.8

அடுத்த செய்தி

டிரெண்டிங்