ஆப்நகரம்

வெளிநாட்டில் அதிகம் விற்பனையாகும் இந்திய கார்கள் இவைதான்!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களுக்கான டாப் 10 பட்டியல்.

Samayam Tamil 25 Sep 2022, 8:59 pm
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கார் ஏற்றுமதி 6.91 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 54,733 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் மாதத்தில் கூட 51,196 கார்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. அதேபோல, 2022 ஜூலை மாதத்தில் மொத்தம் 54,073 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil car


ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப் 10 கார்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 4 மாடல்கள் உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 6,267 பிரெஸ்ஸா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இந்தக் கார் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2021 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,452 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

2021 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,626 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட கியா செல்டோஸ் பிரெஸ்ஸா காரைத் தொடர்ந்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தக் கார் ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஆண்டு 83.82% வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நிசான் சன்னி காருக்கு உலக சந்தைகளில் அதிக தேவை உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் 3வது இடம் பிடித்துள்ளது நிசான் சன்னி கார்தான். 2022 ஆகஸ்ட் மாதத்தில், நிசான் சன்னியின் 4,646 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஹூண்டாய் வெர்னா ஆகஸ்ட் மாதத்தில் 4,094 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 4வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஆகஸ்ட் மாதத்தில் 3,051 யூனிட்களை ஏற்றுமதி செய்து 5வது இடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 6வது இடத்தில் உள்ளது. 2022 ஆகஸ்ட் மாதத்தில் 2,896 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மாருதி பலேனோ காருக்கு பட்டியலில் 7ஆவது இடம் கிடைத்துள்ளது. 2022 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த 4000 பலேனோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பட்டியலில் 8ஆவது இடத்தில் கியா சேனெட் காரும் (2715 யூனிட்), 9ஆவது இடத்தில் மாருதி டிசையர் காரும் (2406 யூனிட்), பத்தாவது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா காரும் (1994 யூனிட்) உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்