ஆப்நகரம்

சேமிப்பு கணக்கு: அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள்!

சேமிப்புக் கணக்குகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி தரும் டாப் 5 வங்கிகள் இவைதான்.

Samayam Tamil 25 Sep 2021, 8:32 pm
பணத்தை சேமித்து வைக்கவும் முதலீடு செய்யவும் விரும்புபவர்கள் பெரும்பாலும் வங்கிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். இதில் போடும் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நிலையான வட்டி லாபமும் கிடைக்கிறது. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்கி பணம் சேமிக்கலாம் என்று நினைப்பவர்கள் முதலில் எந்த வங்கியில் கணக்கு தொடங்குவது என்று ஆலோசிக்க வேண்டும். சேமிப்புக் கணக்குகளை எந்த வங்கியில் வேண்டுமானாலும் தொடங்கலாம்; ஆனால் எங்கு அதிக வட்டி லாபம் கிடைக்கிறது என்று பார்த்து கணக்கு தொடங்குவது நல்லது.
Samayam Tamil bank


பெரிய வங்கிகளை விட சிறு நிதி நிறுவனங்களில்தான் சேமிப்புக் கணக்குகளுக்குப் பெரும்பாலும் அதிக வட்டி லாபம் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பதற்காக சிறு நிதி நிறுவனங்கள் அதிக வட்டி வழங்குகின்றன. வங்கியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அதன் சேவை வரலாறு, வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களின் பரவலான எண்ணிக்கை, விரைவில் செல்லும் வகைகள் கிளைகள் அமைந்திருப்பது போன்றவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்.

RD: போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் முக்கியமான அப்டேட்!
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் இப்போது சேமிப்புக் கணக்குகளுக்கு அதிகபட்சமாக 7 சதவீத வட்டி கிடைக்கிறது. சிறு நிதி நிறுவனங்களிலேயே இந்த வங்கியில்தான் வட்டி அதிகமாக உள்ளது. உஜ்ஜீவன் வங்கியைத் தொடர்ந்து ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 7 சதவீத வட்டி உள்ளது. இதில் மாத இருப்புத் தொகை ரூ.2,500 முதல் ரூ.5,000 வரையில் இருக்க வேண்டும். டிசிபி வங்கியில் 6.75 சதவீத வட்டியும், சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 6.25 சதவீத வட்டியும் நடைமுறையில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்