ஆப்நகரம்

Housing Demand: புதிய வீடுகளுக்கு அதிக டிமாண்ட்.. விற்பனை அதிகரிப்பு!

இந்தியாவில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வீடுகளுக்கான தேவை அதிரடியாக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2022, 12:49 pm
அனைவருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை, இலக்கு இருக்கும். அந்த இலக்கை அடைய நிறையப் பேர் ஓடிக் கொண்டிருப்பார்கள். தற்போதைய காலத்தில் புதிதாக வீடு கட்டுவதும், கட்டிய வீட்டை வாங்குவதும் சுலபமான ஒன்றுதான். வங்கிகளிலேயே வீட்டுக் கடன்கள் குறைந்த வட்டியில் கிடைக்கின்றன. அதேபோல, ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தவணை முறையில் வீடு வாங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.
Samayam Tamil house


இதுபோன்ற காரணங்களால் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கான தேவையும் உயர்ந்துள்ளது. மேஜிக் பிரிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வுப்படி, 2022 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் 13 முன்னணி நகரங்களில் வீடுகளுக்கான தேவை 16.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 ஏப்ரல் - ஜூன் காலாண்டை விடவும் 27.7 சதவீதம் உயர்ந்துள்ளது. வீடு வாங்குவதற்காக வெப்சைட்டில் தேடுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நகை வாங்குறது கஷ்டம்.. அதிரடி உயர்வில் தங்கம்!

நேரடியாக வீடு வாங்குவதை விட, இதுபோன்ற ஆன்லைன் வெப்சைட்கள் மூலமாகத் தேடிப் பார்த்து வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற ஆன்லைன் தேடல்கள் டெல்லியில் 47.2 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 21.4 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 21.2 சதவீதமாகவும், நொய்டாவில் 20.6 சதவீதமாகவும், பெங்களூருவில் 18.8 சதவீதமாகவும், மும்பையில் 16.5 சதவீதமாகவும் இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்