ஆப்நகரம்

’மேக் இன் இந்தியா’.. ’ஸ்கில் இந்தியா’ டொயோட்டாவின் மாஸ்டர் பிளான்!

இந்திய அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் இரண்டு புதிய திட்டங்களை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 27 Jun 2022, 3:48 pm
ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆலை அமைத்து கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது உற்பத்தியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஏற்கெனவே இந்திய அரசு செயல்படுத்தி வரும் மேக் இன் இந்தியா மற்றும் ஸ்கில் இந்தியா ஆகிய இரண்டு திட்டங்களில் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளது.
Samayam Tamil toyota


இத்திட்டங்களுக்காக கர்நாடக மாநில அரசுடன் ரூ.4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் டொயோட்டா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தைப் பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்ய டொயோட்டா நிறுவனம் முடிவுசெய்துள்ளது. பாதுகாப்பான உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத உற்பத்தியை வலியுறுத்தும் வகையில் இத்திட்டத்தில் டொயோட்டா நிறுவனம் இறங்கியுள்ளது.

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்காது.. உடனே இந்த வேலைய முடிங்க!

பெங்களூரு அடுத்த பிடதியில் உள்ள டொயோட்டா ஆலையில் ஏற்கெனவே மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. புதிய தொழில்நுட்ப அம்சங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்ப்படுத்துவது, சர்வதேசத் தரத்திலான வேலையாட்களை உருவாக்குவது போன்றவற்றில் டொயோட்டா நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய இரண்டிலும் பணியாட்களின் திறனை வளர்க்க இந்த முயற்சியில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்