ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம்.. பென்சன் உயர்வு.. நிர்மலா சீதாராமனிடம் தொழிற்சங்கங்கள் ஓப்பன் டாக்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 Nov 2022, 6:24 pm
2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயார் செய்யும் பணிகளை நிதியமைச்சகம் தொடங்கிவிட்டது. இதற்காக பல தரப்புகளுடன் நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தி பட்ஜெட் தொடர்பான கருத்துகளை கேட்டு வருகிறது.
Samayam Tamil Nirmala Sitharaman
Nirmala Sitharaman


கடந்த வாரம் மாநிலங்களின் நிதியமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் தரப்பில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துகளையும் முன்வைத்தார்.

இந்நிலையில், தொழிலாளர் நலன் சார்ந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 7ஆவது பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மதுரை எய்ம்ஸ்.. சென்னை மெட்ரோ.. திருப்பூர் ஜவுளி.. நிர்மலா சீதாராமனிடம் நேரடியாக கேட்ட பிடிஆர்
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. மேலும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை ஏற்க முடியாது எனவும், தனியார்மயமாக்கம் செய்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு தனி கொள்கை உருவாக்கப்பட வேண்டும் எனவும், நிர்வாகத்துக்கு தனி பிரிவு உருவாக்கப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

பட்ஜெட்: இது ஒரு ஜோக்.. நிர்மலா மீட்டிங் புறக்கணிப்பு.. தொழிற்சங்கங்கள் தடாலடி முடிவு!
இதுமட்டுமல்லாமல், EPFO பென்சன் வாங்கும் ஓய்வூதியதார்ரர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் தொகையை 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் EPFO ஓய்வூதியதாரர்கள் பயன்பெற வேண்டும் எனவும், அதற்கான பிரீமியத் தொகையை அரசு செலுத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

இதுபோக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பென்சன் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டன. மேலும், தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் எனவும் நிதியமைச்சரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பழைய ஓய்வூதிய திட்டம்.. பெரிய பிரச்சினை இருக்கு.. நிதி ஆயோக் எச்சரிக்கை!
இன்றுடன் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவடைகின்றன. கடந்த எட்டு கூட்டங்களில் 7 குழுக்களை சேர்ந்த சுமார் 110 பேர் பங்கேற்று பட்ஜெட் தொடர்பான கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில் நகர்ப்புற வேலைவாய்ப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வருமான வரி, உள்நாட்டு விநியோகத்துக்கு திட்டங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரி குறைப்பு, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய கொள்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளும், கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் எதிர்கால சந்ததியினர் மீதான சுமை அதிகரிக்கும் என மத்திய அரசுக்கான ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்