ஆப்நகரம்

எல்லாரும் வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. இந்திய ட்விட்டர் ஊழியர்களுக்கு.. எலான் மஸ்க் உத்தரவு!!

இந்தியாவில் இரண்டு ட்விட்டர் நிறுவனங்களை எலான் மஸ்க் மூடப்பட்டதையடுத்து, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Feb 2023, 1:02 pm
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் மீது எலான் மஸ்க் கட்டுப்பாட்டை எடுத்த பிறகு, கடந்த ஆண்டு இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பில் இருந்த 200 க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்களையும், மேலும் தலைமை இடமான சான்ப்ரான்சிஸ்கோவிலும் உள்ள அதன் 90% ஊழியர்களையும் அவர் பணிநீக்கம் செய்தார்.
Samayam Tamil Twitter India closed


அதனையடுத்து நேற்றைய தினம் எலோன் மஸ்க்கின் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு, ட்விட்டர் இன்க் நிறுவனத்தின் மூன்று இந்திய அலுவலகங்களில் இரண்டை மூடிவிட்டு, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொன்னதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

எலோன் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் கட்டுப்பாட்டை எடுத்ததிலிருந்து, உலகெங்கிலும் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்வது முதல் அலுவலகங்களை மூடுவது வரை செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டர் பங்குகளை வாங்கி அதை சொந்தமாக்கியவுடன் செய்த முதல் வேலை சிஇஓ அகர்வாலை அதிரடி பணிநீக்கம் செய்ததுதான். அதை தொடர்ந்து அதிகமான இந்தியர்கள் ட்விட்டரிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதுவே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்தியர்கள் மட்டுமின்றி பல்வேறு ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி வீட்டுக்கு அனுப்பினார் எலான் மஸ்க். அது மட்டுமின்றி இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே இவருக்கும் அகர்வாலுக்கும் நல்ல உறவு இல்லாத காரணத்தாலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்தியாவில் புது தில்லி மற்றும் மும்பையில் உள்ள தனது ட்விட்டர் அலுவலகங்களை மூடியுள்ளது என்றும் பெங்களூருவில் பொறியாளர்களைக் கொண்ட ஒரு அலுவலகத்தைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்